தடாகம் பன்னாட்டு படை விழா 18யினை நடாத்திய கலைமகள் ஹிதாயவிற்கும் தடாகம் கலை இலக்கிய வட்டத்திற்கும் பாராட்டுக்கள். யூ.கே.நாபீர்……


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் -
சாய்ந்தமருது ஈன்றெடுத்த கலை முத்து என வர்ணிக்கப்படும் கலை மகள் ஹிதாயா றிஸ்வியின் புத்தக வெளியீட்டு விழாவில் தான் கலந்துகொள்வதாக இருந்தும் தவிர்க்க முடியாத காரணத்தினால் கலந்துகொள்ள முடியாமையினை இட்டு தான மனவேதனை அடைவதாக குறித்த நிகழ்விற்கான வாழ்த்து செய்தியில் நாபீர் பெளண்டேசன் சார்பாக பொறியியலாளர் யூ.கே.நாபீர் தெர்விக்கின்றார்.
மேலும் குறித்த விடயம் சம்பந்தமாக கருத்து தெரிவிக்கையில்.... .இன்று 18.08.1018 கொழும்பு அஞ்சல் தலைமை கேட்போர் கூடத்தில், தடாகம் அமைப்பு நடத்திய கலைஞர்கள், மற்றும் ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும், 100 கவிஞர்கள் வழங்கிய கவிதை தொகுப்பு அடங்கிய புத்தக வெளியிட்டு விழாவும், தடாகம் பன்னாட்டு படை விழா 2018, என்ற நிகழ்வு இனிதே நடை பெற்றது.
இன் நிகழ்வு அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் முக்கிய அர்ப்பணிப்புடன் இடம் பெற்றமையானது மகிழ்ச்சி அளிக்கும் விடயம் என்பதற்கு அப்பால் முஸ்லிம் பெண் எழுத்தாளர் என்ற அடிப்படையில் கலைதுறை என்ற வட்டத்திற்குள் பாராட்டப்படக்கூடிய ஒர் வரலாற்று நிகழ்வாகவே நான் பார்கின்றேன். அத்தோடு பெண் எழுத்தாளர் ஹிதாயவும் தடாகம் கலை இலக்கிய வட்டமும் கலைத்துறையில் இன்னும் பல சாதனைகள் படைத்து வரலாறு படைக்க வேண்டும் என்பது தனது எதிர்பார்ப்பாகவும் மனதார வாழ்த்தும் செய்தியாகவும் இருக்கின்றது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -