தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய உப வேந்தர் நியமனம் தொடர்பில் அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களில் பலர் நேற்று (03) பொலன்னறுவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.
தென்கிழக்குப் பல்கலையின் முன்னாள் உபவேந்தர் நாஜிமையே மீண்டும் அந்தப் பதவிக்கு அமர்த்துமாறும் அண்மையில் நடந்த தேர்தலில் 13 வாக்குகள் பெற்று அவர் முதலிடத்தில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் அவருக்கு ஆதரவாக அதிக எண்ணிக்கையானோர் கையொப்பமிட்ட மகஜர் ஒன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த விடயத்தில் ஜனாதிபதியும் உயர் கல்வி அமைச்சரும் அதிக கரிசனை காட்டியுள்ளதால் மீண்டும் நாஜிம் அவர்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக நியமிக்கப்படும் அதிக சாத்தியங்கள் தோன்றியுள்ளன.