தனித்துவம் என்ற கோஷத்தால் சமூகத்தில் பிளவுகளையும்,கட்சிக்குள் தொடர் பூசல்களையும் உருவாக்கி சிதறுண்டு கிடக்கிறது.1994ம் ஆண்டுக்கு முன்னர் இரண்டு தேசியக்கட்சிகளிலும் முஸ்லீம்களின் அரசியல் இருப்பு பலமாக இருந்தது.குட்டித் தலைவர்களோ,பிரதேசவாதமோ இருக்கவில்லை.
இன்று குட்டித் தலைவர்கள் ,ஒவ்வொரு பிரதேசத்திற்கும் முஸ்லிம் சமூகத்தை பலகூறுகளாக துண்டாடி முரண்பாடுகளையும் ,பிரதேசவாத சிந்தனையையும் வளர்த்து வருகின்றனர்.
இருந்தும் அபிவிருத்தி தொடர்பில் முஸ்லீம்கள் பின்னடைவிலே இருந்தனர்.
இருந்தபோதும் முஸ்லீம்களின் உரிமைக்காக உருவாக்கப்பட்ட முஸ்லீம் காங்கிரஸ் அஷ்ரபின் தலமைத்துவத்தில் பாரிய மாற்றங்களைக் கண்டது.ஆனால் அஷ்ரபின் மறைவிற்குப் பின்னர் பேரம்பேசும் சக்தியாக இருந்த முஸ்லீம் சமூகம் பேரினவாதக் கட்சிகளிடம் அடிமையாகும் நிலைக்கு வந்துள்ளது.
இன்று சுமார் 21 முஸ்லீம் பிரதநிதிகள் ஆளும்கட்சி உறுப்பினராகவே உள்ளனர்.இலங்கை அரசியல் வரலாற்றில் இந்த முறைதான் முதற்தடவையாக சகலரும் ஆளும்கட்சியில் உள்ளனர்.இரண்டு பேரினவாதக் கட்சிகளிலும் இயலுமான வரையில் ஒட்டிக் கொண்டு வாழ்வதே தனித்துவமாகி உள்ளது.
எதிர்க்கட்சி வரிசையில் எவரும் இல்லை.எவருக்கும் இருப்பதற்கு மனமும் இல்லை.ஆளும்கட்சியின் செல்லப் பிள்ளைகளாக உள்ளனர்.முஸ்லீம் மக்களிடம் கிராமங்களில் வீரமாகப் பேசி,பாராளுமன்றத்தில் நாவிழந்து உள்ளனர்.எந்தச் சட்டம் வந்தாலும் எதிர்த்து பேசாமல் கையை உயர்த்த பழக்கப்பட்டு உள்ளனர்.
கடந்தகாலங்களில் இயற்றப்பட்ட பல சட்டமூலங்களை ஆதரித்து,வெளியே வந்து முதலக்கண்ணீர் வடித்தனர்.இதனைத்தான் எதிர்வரும் மாகாணசபைச் சட்டதிருத்தத்திலும் செய்ய உள்ளனர்.
முஸ்லீம்களை தேர்தல் காலங்களில் இனவாதம் மற்றும் பிரதேச வாதங்களால் தூண்டிவிட்டு,ஆளும்கட்சிப் பக்கம் இருப்பது மரபாகிவிட்டது.
தமிழ்தலமைகள் எதிர்க்கட்சியில் இருந்து,இன்று எதிர்க்கட்சி தலைவரைப் பெற்று வரலாறு படைத்துள்ளனர்.இவர்கள் ஆளும்கட்சியில் ஒட்டி இருக்கும் 21 முஸ்லீம் பிரதிநிதிகளைவிட தங்களது சமூகத்திற்கு பல்வேறு வேளைத் திட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
கடந்தகாலங்களில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளை பாராளுமன்றத்தில் விசேட பிரேரணையாக கொண்டுவரவோ,முஸ்லீம்களின் காணி மற்றும் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகவோ சகல பிரதிநிதிகளும் ஒருமித்து பேச முடியாத சாயம்போன நிலமை உள்ளது.
இருபேரினவாதக் கட்சிகளும் தங்களது பலத்தை முஸ்லீம் பிரதிநிதிகளுக்கு சில சலுகைகளை வழங்கி பாராளுமன்றத்தில் ஆட்சியை நடாத்துகிறது.முஸ்லீம்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகள் குப்பைத் தொட்டிலில் கிடக்கிறது.குறைந்த பட்சம் அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்ற தமிழ்தலமைகள் மத்தியில் இருக்கின்ற ஒற்றுமை முஸ்லீம் அரசியல்வாதிகளிடம் இல்லை.
அமெரிக்கா,இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் ஆதிக்கம் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அரசியல் அமைப்பு உருவாக்கம் போன்றவற்றில் அதிகமாக உள்ளது.இந்த சியோனிசக்கரர்களின் ஆதிக்கம் முஸ்லீம்களின் நீண்டகால இருப்புக்கு பாதகமாகும்.
இதற்கு நாட்டின் அரசியல் செயற்பாட்டை விமர்சிக்க அல்லது எதிர்க்க எந்த ஒரு முஸ்லீம் பிரதிநிதியாலும் முடியாதவாறு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது.சமூகத்திற்கு பிழையானாலும் பாராளுமன்றத்தில் கையுயர்த்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உள்ளது.தங்களின் அமைச்சுப்பதவி மற்றும் சலுகைகளுக்காக சோரம் போவதற்கு இரண்டு தேசியக் கட்சியிலும் முண்டியடிப்பதே முஸ்லீம்களின் தனித்துவமாகும்.
இன்று சமூகத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் அரசியலமைப்புத் திருத்தம் பற்றிப் பேசப்படுகிறது.சிங்களக் கடும் போக்காளர்கள் எதிர்த்தாலும் கடந்தகலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இதனை எதிர்க்கவில்லை.காரணம் சுமேந்திரனின் அதிஉட்ச ஆக்கிரமிப்பு இதில் உள்ளது.நாட்டில் எத்தனையோ விடயங்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்துகின்ற தமிழ்மக்கள்,இந்த அரசியலமைப்பு மாற்றத்திற்கு எதிராக நடாத்தவில்லை???என்??சாதகமான விடயங்கள் உள்ளது.
மாறாக இந்தக்குழுவில் இருக்கின்ற எந்த முஸ்லீம் தலமையும் முஸ்லீம்களிடத்தில் வந்து இதன் சாதக பாதகங்களைப் பற்றிப் பேசவில்லை.மாறாக முஸ்லீம்களுக்கு எதிராக செயற்பட மாட்டோம் என்ற பொய்மூட்டைகளை விடுகின்றனர்.இறுதியில் பாராளுமன்றத்தில் கையை உயர்த்திவிட்டு புதுப் புரளியைக் கிளப்புவார்கள்.சந்திரிக்கா ஆட்சியல் வரையப்பட்ட அரசியலமைப்பில் அஷ்ரப் கணிசமானளவு பங்கை வகித்தார்.இன்றைய அரசியலமைப்புக் குழுவில் இருக்கிம்ற ஹகீம்,ரிசாத்துக்குத் தெரியாமல் பல விடயங்களை சுமேந்திரனும்,ஏனையவர்களும் செய்தமை அண்மையில் வெளிக் கொண்டுவரப்பட்டது.
வடகிழக்கு பிரிப்பு ,கரையோர மாவட்டம்,கல்முனை இணைந்த அதிகார அலகு மற்றும் தென்கிழக்கு அலகு என்று முஸ்லீம்களை தேர்தலுக்கு உசுப்பேத்தும் கையாளாகாத விடயங்களை முஸ்லீம் தலமைகள் வாக்குவேட்டைக்காக இரையாகப் போடுகின்றனர்.
வடகிழக்கு இணைப்ப சாத்தியமா?என்பது கேள்விக்குறியாகவோ அல்லது சாத்தியமற்றதாகவோ இருக்கட்டும்.ஆனால் தமிழ் தலமைகள் இணைப்பு விடயத்தில் ஒரணியாகவும்,பலமாகவும் இதுவரையில் சோரம் போகாமல் உள்ளனர்.அண்மையில் வெளியான வரைபில் கூட **வடகிழக்கு இணைப்பு தொடர்பில் ஆலோசிக்கலாம்** என்ற வாசகத்தை சேர்த்து தங்களது பலத்தை நிரூபித்துள்னர்.ஆகவே தமிழர்களின் அரசியல் அபிலாஷை மற்றும் நிரந்தர அரசியல் தீர்வை நோக்கியதாகவே உள்ளது.ஆனால் முஸ்லீம்களின் அரசியல் பதவிகளை பாதுகாப்பதற்கான விலைபோன அரசியலாக மாறிவிட்டது.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் யிரம் குழுக்கலாக பிரிந்து முஸ்லீம் தலமைகள் மக்களை குழப்பத்தில் விட்டனர்.இதன் பயனாக முஸ்லீம்களுக்கு கடந்தகாலங்களில் தனித்து ஆட்சியமைத்த பல சபைகளை இழக்க வேண்டி எற்பட்டது.இதிலும் முஸ்லீம்காங்கிரஸின் கோட்டையான கல்முனையில் கூட தமிழ்கட்சிகளின் தயவில் ஆட்சியமைக்கும் கேவலமான நிலை உருவாகியது.
இன்று முஸ்லீம் கட்சிகள் பேரினவாதக் கட்சிகளுடன் ஒட்டிக் கொள்வது மட்டுமல்ல,எந்தத் தேர்தலிலும் கூட்டமைத்துக் கேட்கவே விரும்புகின்றனர்.தங்களின் கட்சியால் தேர்தல்களை தனித்துக் கேட்பதற்கு கூட திரணயற்ற நிலமை உருவாகி உள்ளது.இதனால் வருடாந்தம் நடத்தும் கட்சி மகாநாடு மட்டுமே கட்சியின் பெயரால் இடம்பெறுகிறது.எதிர்காலத்தில் முஸ்லீம்களுக்கான கடறசி என்ற அடையாளம்கூட மறைந்து போகக்கூடிய அபாய சமிக்கை உள்ளது.
ஆகவே இன்று வடகிழக்கில் முஸ்லீம்கள் மற்றும் கல்விமான்கள் மத்தியில் பல்வேறு உணர்வலைகள் தோன்றிவருகிறது.குறிப்பாக முஸ்லீம் அரசியல் தலமைகள் மீது மக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.தமிழ் மற்றும் சிங்கள கடும்போக்கு இனவாத செயற்பாடுகள் தங்களது இருப்பின் மீது முஸ்லீம்களுக்குச் சந்தேகத்தை உருவாக்கி உள்ளது.
தங்களின் உரிமைகளையும்,தேவைகளையும் தாமாகவே பாதுகாக்க வேண்டும் என்ற மனநிலை கிழக்கு முஸ்லீம்களிடத்தில் அதிகரித்துள்ளது.இதற்கு முஸ்லீம் தலமைகள் மீதுள்ள நம்பிக்கை இழப்புகளே காரணமாகும்.
ஆகவே முஸ்லீம்கள் தனியான இனம்.இவர்களின் தனித்துவமும் கலாச்சாரமும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.வெறுமனே பேரினவாதிகளிடம் பிச்சைக்ககாரனாக இருந்து,மக்களிடம் மாவீரனாகப் பேசுவதில் பயனேதும் இல்லை.முஸ்லீம்களின் அதிகாரப் பகிர்வு,மீள்குடியேற்றம்,காணிப்பிரச்சனை மற்றும் வேளைவாய்ப்பு புறக்கணிப்பு என்று பிரச்சனைகள் தலைக்கேறி விட்டது.
அரசியல் ரீதியாக அடையமுடியாத சமூகம் ஆயுதங்களை நாடியதே வரலாறு.இந்த நிலைக்கு முஸ்லீம் சமூகத்தை தற்போதயைய முஸ்லீம் அயசியல்வாதிகளின் நிலைப்பாடு கொண்டுசெல்ல நிர்ப்பந்திக்கிறது.இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
தற்போது நடக்கின்ற இருகட்கி நல்லாட்சியில் அதிகமான முஸ்லீம் பிரதிநிதிகள் உள்ளனர்.ஆகவே முஸ்லீம்களின் உரிமைகள் விடயத்திலாவது குறைந்த பட்ச இணக்கப்பாடு அவசியமாகும். தற்போதைய நிலையில் அடுத்த மஹிந்ததரப்பு ஆட்சி வந்ததும் முந்தியடித்து ஓட்டப் பந்தயத்துக்காக காத்திருப்தாகவே புலப்படுகிறது.
பேரம் பேசும் முஸ்லீம் அரசியல் சாயம் போனதாகிவிட்டது!
தனித்துவமான முஸ்லீம் அரசியல் விலைபோகும் பங்குச்சந்தையாகிவிட்டது!
கட்டமைப்பான முஸ்லீம் அரசியல் பிரதேசவாதங்களின் சரணாலயமாகிவிட்டது.