கண்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டு இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் கரிமா மரிக்காா் தற்போழுது இங்கிலாந்தி்ல் உள்ள ஹரோ பிராந்தியத்தின் மேயராக தெரிபு செய்யப்பட்டுவருகின்றாா்.
கடநத வாரம் அவர் கொழும்பு வந்திருந்தாா். வை.எம்.எம். ஏ யின் மகளிா் அமைப்பு, மேயா் கரிமா மரிக்காரை கொழும்பில் உள்ள வை.எம்.எம். ஏயின் மகளிா் அமைப்பினா் அழைத்து இலங்கை முஸ்லிம் பெண் ஒருவா் ஜக்கிய இராச்சியாத்தில் மேயராக பணிபுரிவதனையிட்டு இலங்கைப் பெண்கள் பெருமை கொள்வதாகவும் அதிலும் முஸ்லிம் சமுகம் அவரது சேவையை பாராட்டி கௌரவிப்பு நிகழ்வொன்றினை நடாத்தியது.
இந் நிகழ்வு நேற்று (9) மருதானை வை.எம்.எம். ஏ மகளிா் அமைப்பின் தலைவி பவாசா தஹா தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் போது கொழும்பில் நடைபெற்றது. இந் நிகழ்வின்போது 10 அங்கவீனா்களுக்கு சக்கர நாற்காளிகளையும் அவா் வழங்கி வைத்தாா். இந் நிகழ்வின் வை.எம்.எம்.ஏ செயலாளா், புரவலா் ஹாசீம் உமா், மக்கியா முசம்மில், காலித் பாருக்கும் கலந்து கொண்டனா்.