ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களினதும், பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அவர்களினதும் வழிகாட்டலின் கீழ் தேசிய அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் 2015ம் ஆண்டிலிருந்து நாடுபூராகும் நடைமுறைப்படுத்தப்பட்ட "செமட்ட செவண" மாதிரிக் கிராமங்களை அமைக்கும் தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாலர் பிரிவில் சவுக்கடி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விருட்சம் மாதிரிக் கிராமத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் கடற்தொழில், நீரியல் வழங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,தேசிய ஒருங்கிணைப்பு , நல்லிணக்க மற்றும் அரசகரும மொழிகள் பிரதி அமைச்சர் செய்யித் அலி ஷாஹிர் மௌலானா, மட்டக்கப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இன் நிகழ்வில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ உரையாற்றுகையில் செமட்ட செவண தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டுப்பயணாளிகள் தெரிவு விடயத்தில் எந்தவித பேதமும் காணப்படவில்லை எனவும்
வீட்டுக்கான தேவை என்பதே இங்கு காணப்படும் முக்கிய தகைமையாகும்
வீடு என்பது குடும்பத்தின் அடிப்படை தேவையாகும் வீட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பத்தினரின் தேவைக்கேற்ப இது மாறுபடுவதுடன் பல்வேறு சமூக கலாச்சார மற்றும் பூகோல ரீதியிலான தேவைக்கேற்ப இது வேறுபடலாம்
106வது மாதிரிக் கிராமமாக விருட்சம் எனும் கிராமத்தை உருவாக்கி மக்கள் பாவனைக்கு கையளிக்கும் போது நான் பெரிதும் சந்தோசம் அடைகின்றேன்
மேலும் சொந்த காணிகளின் வீடு கட்டுவதற்கு அரசாங்க கடண்தொகைகளை குறைந்த வட்டியில் பெற்றுகொடுப்பேன்
மேலும் எனது ஆட்சிக்காலத்தில் வாடகை வீட்டில் வாழ்பவர்கள் எண்ணிக்கை முற்றுமுழுதாக குறைக்கப்பட்டு இவ்வாறான மாதிரிக்கிராமங்களில் உள்வாங்கப்படுவார்கள்
என்று மக்கள் முன்னிலையில் நம்பிக்கை ஊட்டும் முறையில் தெரிவித்தார்...
மேலும் இன்நிகழ்வில் குறித்த பயணாளிகளுக்கு வீடுகள் கையளிப்பும்
அரசாங்க வீட்டுக் கடன் தேவையுடையோர் 500 பயணாளிகளுக்கு குறைந்த வட்டியில் உள்ள வீட்டுக்கடன் பெற்றுக்கொடுத்தமையும், மூக்குக்கண்ணாடி தேவையுடையோருக்கு
கண்ணாடிகளும் வழங்கப்பட்டதோடு,இன் நிகழ்வில் கலந்துகொண்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் 50 க்கு உட்பட்ட வீட்டுக்கடனுக்குரிய விண்ணப்ப படிவங்களும் வழங்கப்பட்டது.