ஓட்டமாவடி தியாவட்டவான் ஏஆர் றஷாத் விளையாட்டுக் கழக சீருடை அறிமுகமும் மற்றும் வாழைச்சேனை டேன்ஜரஷ் அணியுடனான நட்புறவு கிரிக்கட் சுற்றுப் போட்டியும் தியாவட்டவான் அரபா வித்தியாலய பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
தியாவட்டவான் ஏஆர் றஷாத் விளையாட்டுக் கழக அணித் தலைவர் எஸ்.ஹலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அமிஸ்டீன் கலந்து கொண்டார்
மேலும் அதிதிகளாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் அல் அமீன்;, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் அ.நஜீம், செம்மண்ணோடை கிராம சேவை உத்தியோகத்தர் அன்வர் சதாத், அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.நளீம், தியாவட்டவான் அல் அரபா வித்தியாலய அதிபர் எஸ்.இஸ்மாயில் மற்றும் கிராம சக்தி தவிசாளர் பாறூக், தாஜுதீன் உட்பட ஊர் பிரமுகர்கள் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது நடைபெற்ற நட்புறவு கிரிக்கட் சுற்றுப் போட்டியில் தியாவட்டவான் ஏஆர் றஷாத் விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்றுக் கொண்டது. வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக் கேடயம் வழங்கி வைக்கப்பட்டது.



