மனிதம் பேணும் மகத்தான பணிக்கு மாபெரும் இரத்ததான நிகழ்வு


பி.எம்.எம்.ஏ.காதர்-
ல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் அனுசரையுடன் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை ஏற்பாடு செய்திருந்த நான்காவது மாபெரும் இரத்ததான நிகழ்வு சனிக்கிமை(28-07-2018)மருதமுனை மசூர்மௌலானா வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை அலுவலகத்தில் காலை 9.00மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளையின் தலைவர் எம்.எச்.அஹமட் அஜ்மீர் தலைமையில் இடம்பெற்ற இந்த இரத்தான நிகழ்வில் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் இரத்த வங்கிக்குப் பொறுப்பான டொக்டர் எம்.ரமேஸ் தலைமையிலான டொக்டர் எப்.எம்.ஹில்மி மற்றும் தாதி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்

இங்கு 85 பேர் இரத்தானம் செய்தமை குறிப்பிடத்தக்கது இரத்தானம் செய்த அனைவருக்கும் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் சான்றிதழ் வழங்கப்பட்டது. இரத்தானம் செய்த அனைவருக்கும் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் மருதமுனை கிளையின் தலைவர் எம்.எச்.அஹமட் அஜ்மீர் நன்றி தெரிவித்துள்ளார். 








  













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -