சிங்கப்பூர் நாட்டில் நடைபெற்ற ஆங்கில மொழிமூல சர்வதேச கணித வினாடி வினாப் போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவி சித்தீக் சியாமா சுஹா தன்னுடைய திறமையினை வெளிக்காட்டி மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
நாட்டிக்கும் பிரதேசத்துக்கும் கல்வி கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்த்துத் கொடுத்துள்ள குறித்த மாணவிக்கு அரசியல் தலைவர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர்கள், பாடசாலை நலன்விரும்பிகள், மாணவ சமூகத்தினர், அமைப்புகள், நிறுவனங்கள் போன்றவைகள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு குறித்த மாணவி இன்னும் பல சாதனைகளை நிலைநாட்டி ஈருலகிலும் வெற்றிபெற தங்களுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி குழுவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.