அம்பாரை மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளராக முனாஸ் பொறுப்பேற்பு



நூருல் ஹுதா உமர்-
அம்பாரை மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் புதிய பிரதம பொறியியலாளராக, பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ் அவர்கள் பதவியுயர்வு பெற்று கடந்த  (04) வெள்ளிக்கிழமை அம்பாரை மாவட்ட அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

வீதி அபிவிருத்தி திணைக்களத்தில் கல்முனை பிராந்திய நிறைவேற்றுப் பொறியியலாளராகத் திறம்படச் சேவையாற்றி வந்த இவர், இலங்கை பொறியியலாளர் சேவையில் முதலாம் தரத்தைச் சேர்ந்த பொறியியலாளர் என்பதுடன் தனது திறமையான நிர்வாக ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்பு மிக்க பணியின் காரணமாக தற்பொழுது அம்பாரை மாவட்ட பிரதம பொறியியலாளராகப் பதவியுயர்த்தப் பட்டுள்ளார்.

இவரது தலைமையில் அம்பாரை மாவட்டத்தின் வீதி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் மேலும் புதிய பரிமாணத்தை எட்டி, பெருவெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :