“சீறுநீரக பாதிப்பிலிருந்து எம் மாணவ சமூகத்தை பாதுகாப்போம்” விழிப்புணர்வு

அபு அலா -
ட்டாளைச்சேனை அறபா வித்தியால மாணவர்களுக்கான மருத்துவக் கல்வி மற்றும் போசனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று நாளை திங்கட்கிழமை (30) ஆம் திகதி பாடசாலையில் இடம்பெறவுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ஏ.அன்சார் தெரிவித்தார்.
“சீறுநீரக பாதிப்பிலிருந்து எம் மாணவ சமூகத்தை பாதுகாப்போம்” என்ற கருப் பொருளில் “ஆரோக்கியமான வாழ்வுக்கு சிறந்த வழி” என்ற அடிப்படையில் இடம்பெறவுள்ள இந்த விழிப்புணர்வு நிகழ்வுக்கு பிரதம வளவாளராக சுகாதார அமைச்சின் ஆலோசகரும், உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கைக்குரிய நிபுணத்துவ ஆலோசகரும், நிந்தவூர் அசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் கந்துகொண்டு உரையாற்றவுள்ளார். இதன்போது “சீறுநீரக பாதிப்பிலிருந்து எம் மாணவ சமூகத்தை எவ்வாறு பாதுகாப்பது என்ற விழிப்புணர்வு அடங்கிய துண்டுப் பிரசுங்களுடன் விழிப்புணர்வு அட்டைகளும் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்வுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் அட்டாளைச்சேனை கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஏ.சி.கஸ்ஸாலி, வலயக் கல்வி இணைப்பாளர் ஆசிரிய ஆலோசகர் ஏ.எல்.பாயிஸ் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினரும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -