ஏறாவூரில் பாடசாலை புனர்நிர்மானம் செய்து கையளிப்பு

ஏ.ஆர்.எம்.றிபாய்-
US PACOM. (The United states pacific commend) அமெரிக்க நிதி உதவி திட்டத்தின் கீழ் கௌரவ கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் Z.A.நஸீர் அஹமட் அவர்களின் சிபாரிசின் அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள 3பாடசாலைகளில் ஏறாவூரில் ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயம் புனரமைப்பு செய்வதுக்காக தெரிவுசெய்யப்பட்டது
பின்பு இத்திட்டம் காலதாமதப்படுத்தப்பட்ட போது இதில் தலையிட்டு முன்னாள் முதலமைச்சர் அவர்கள் இதற்கான நிதியை துரிதமாக கொண்டுவருவதுக்கான முயற்சியை அமெரிக்க தூதுவர் அதுல் கெஸப் அவர்களோடு சினேக பூர்வ பேச்சுவார்தையின் அடிப்படையில் இன் நிதி மீண்டும் கொண்டுவர துரிதமாக்கப்பட்டது.

எனவே ஏறாவூர் அப்துல் காதர் வித்தியாலயமும் ஆரம்ப சாத்தியவள அறிக்கைகளை பெறுவதற்கான நஸீர் அஹமட் அவர்களின் ஏற்பாட்டின் பெயரில் மாகாண கல்விப்பணிப்பாளர் M.T.A.நிஸாம் அவர்களும் அமேரிக்க தூதுவராலய அதிகாரிகளும், முதலமைச்சர் அலுவலக. உத்தியோகத்தர்களும் கள விஜயம் மேற்கொண்டிருந்தனர்
அந்த வகையில் 150000 அமேரிக்கன் டொலர் (2கோடியே 27 இலட்சம்) செலவின் நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தியடைந்த நிலையில் இன்று 02.07.2018 திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது

இத்திட்டம் முதலமைச்சரின் காலப்பகுதியில் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வேலைகள் முன்னெடுக்கப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது இன்று முதலமைச்சரின் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட. இப்பாடசாலை அபிவிருத்திகள் தற்போது முடிவுற்று மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் மு.முதலமைச்சரின் பாரிய பங்களிப்பை மறக்கவில்லை என்பது
இன்நிகழ்வில் பேசிய அப்பாடசாலையின் அதிபர் நினைவூட்டினார்.

இன் நிகழ்வில் அமெரிக்க தூதுவராலய அதிகாரிகளும் ஊர் பிரமுகர்களும்
அப்பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -