எதிர்வரும் 2018.07.07 சனிக்கிழமை பிற்பகல் 6 மணியளவில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும் பொது ஜன பெரமுனவின் மாவட்ட தலைவருமான S.M.சந்திரசேன அவர்களின் அனுராதபுர மாத்தளை சந்தி இல்லத்தில் சுமார் 2000 மேற்பட்ட மாவட்ட முஸ்லிம் சம்மேளன பொதுக்கூட்டம் வெகு விமர்சையாக நடக்கவிருக்கின்றது என்பதை அறியத்தருகின்றோம்.
இந்த நிகழ்விற்கு பிரதம அழைப்பாளராக இலங்கை ஜனனாயக சோசலிச குடியரசின் ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மகிந்த ராஷபக்ஸ அவரகள் கலந்து கொள்ள விருக்கின்றார்....
அன்றைய தினம் வடமத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் A.R.A.ஹுஸைன் அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட முஸ்லிம் அமைப்பாளராக நியமிக்க பட இருக்கின்றார் என்ற மகிழ்வான செய்தியுடன்
அனுராதபுர மாவட்டத்தை சேர்ந்த சகல முஸ்லிம் கிராமங்களில் இருந்தும் புத்திஜீவிகள் சான்றோர்கள் ஆன்றோர்களின் பங்களிப்புடன் நடைபெற இருக்கின்றது. மாவட்ட முஸ்லிம்களை அன்போடு அழைக்கின்றோம்.