சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில்உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு 'சிப்தொற புலமைப்பரிசில்' வழங்கும்நிகழ்வு மற்றும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு என்பனஇன்று (0) வியாழக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம்தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர்ஐ.எம்.ஹனீபா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றகுமான்,கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், சமுர்த்தி முகாமையாளர்களான ஏ.யூ.ஜூனைதா,ஏ.எல்.ஏ.கபூர், சமுர்த்தி உதவி முகாமையாளர்களான எம்.யூ.ஹில்மி, ஏ.எம்.எம்.றியாத்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஜூஹைர், பிரதம இலிகிதர் எம்.எம்.றசீட் உள்ளிட்டசமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள்என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது தெரிவுசெய்யப்பட்ட 11 மாணவர்களுக்கான 'சிப்தொற புலமைப்பரிசிலுக்கான சான்றிதழ்; காசோலை மற்றும் கற்றல் உபகரணங்கள் என்பவற்றைபிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகள் வழங்கி வைத்தனர்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்படும் 'சிப்தொற புலமைப்பரிசில்'ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் க.பொ.த சாதாரண தரத்தில் சிறந்தபெறுவேறுகளைப் பெற்ற சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களிலிருந்து தெரிவுசெய்யப்படுவதுடன் உயர்தரத்தில் கல்விகற்கும் 2 வருட காலப்பகுதிக்கு மாதாந்தம்ஆயிரத்தி ஐநூறு (1500.00) ரூபா வீதம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.