ஞானசார தேருக்கு கடுமையான உழைப்புடன் ஒரு வருட சிறை


குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசார தேருக்கு கடுமையான உழைப்புடன் 01 வருட சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் அவருக்கு 50,000 ரூபா நட்ட ஈடும், 3000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஹோமாகம பிரதான நீதவான் உதேஷ் சனசிங்க இன்று (14) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

ஒரு வருடத்துக்கான சிறைத் தண்டனை 06 மாதங்களில் நிறைவடையும் வகையில் அவருக்கான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவத்தில் கடந்த மே மாதம் 24ம் திகதி ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

2016 ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு இடம்பெற்று வந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -