(வீடியோ).,நாபீர் பெளண்டேசனின் இஃப்தாரில் சம்மாந்துறை முஸ்லிம் காங்கிரசின் முக்கிய புள்ளிகள்

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
கிழக்கு மாகானம் தழுவிய சமூக சேவைகள் நிறுவனமான நாபீர் பெளண்டேசனும் அதன் சகோதர ECM கம்பனியும் இணைந்து நடாத்திய வருடாந்த இஃப்தார் நிகழ்வில் சம்மாந்துறை தேர்தல் தொகுதியின் அரசியல் தலைமையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினருமான மன்சூர் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் சாய்ந்தமருது அமைப்பார் பிர்தெளஸ், உயர் பீட உறுப்பினர் அஸீஸ் என முஸ்லிம் காங்கிரசின் முக்கிய புள்ளிகள் கலந்து கொண்டதனை அவதனிக்க கூடியதாக இருந்தது.
ஆண்களுக்கு வேறாகவும், பெண்களுக்கு வேறாகவும் சுமார் 750 நோன்பாளிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இடம் பெற்ற குறித்த இஃப்தார் நிகழ்வில் இவ்வாறு சம்மாந்துறை பிரதேச ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கிய புள்ளிகள் கலந்து கொண்டமையானது மிக விரைவில் நாபீர் பெளண்டேசனின் தலைவரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக முக்கிய தீர்மானத்தினை எடுக்க கூடிய நிலையினை வெளிக்காட்டியது.
அத்தோடு சம்மாந்துறை அரசியல் தலைமையான பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரின் கரங்களை மேலும் பலப்படுத்தி வருகின்ற மாகாண சபை தேர்தலில் சம்மாந்துறை தொகுதியினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக மாற்றி அமைப்பதற்கான ஓர் உத்தியோக பூர்வமற்ற நட்பு ரீதியிலான சந்திப்பாகவும் குறித்த இஃப்தார் நிகழ்வினை ஊகித்து கொள்ள முடிந்தது. மேலும் அங்கு வருகை தந்திருந்த முக்கியஸ்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் கலந்துரையாடலில் இடம் பெற்ற கருத்து பரிமாறல்களும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தமை முக்கிய அம்சமாகும்.
குறித்த இஃப்தார் நிகழ்வின் சுருக்கமான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ - 






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -