மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் முதன்முறையாக பலதரப்பட்ட சமூகங்களுக்கிடையில் சகவாழ்வுநல்லிணக்கம், புரித்துணர்வுகளை மேம்படுத்தும் வகையில் நோன்புதிறக்கும் விஷேட இப்தார் வைபவம் நேற்று இடம் பெற்றுள்ளது.
ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதித்தவிசாளர் யு.எல்.அஹமட்தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பல்லின சமூகங்கள் வாழும் நம்நாட்டில் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்பட இலங்கையர் என்றவகையில் ஒன்றிணைய வேண்டிய சமகால அவசியம் மற்றும் போதையற்ற இளைஞர் சமுதாயத்தை உருவாக்க வேண்டிய தேவைகுறிந்தும் விழிப்புட்டப்பட்டது.
இதற்கான விஷேட உரையினை வாழைச்சேனை கோறளைப்பற்று மத்திபிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் மௌலவிஏ.எல்.பீர்முஹம்மத் (காஸிமி) ஆற்றினார்.
இவ் இப்தார் வைபவத்தில் மத போதகர்கள்,மூப்படைகளின்பிரதிநிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள் அதிகாரிகள்,சிவில் சமூகஅமைப்புக்களின் தலைவர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்துசிறப்பித்தனர்.
இவ் இப்தார் வைபவத்தினை ஓட்டமாவடி றேஞ்சர்ஸ்விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.