விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கேரள கச்சா ஒருத்தொகையுடன் மூவர் கைது செய்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலிரூட் பகுதியிலே வீடொன்றிலிருந்து 300 கிராம் கேரள கஞ்சாவை 02.05.2018 மதியம் பொலிஸார் மீட்டனர்
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வீட்டை சுற்றிவளைத்து சேதணையிட்டபோதே விற்பனைக்காக பொதி செய்து வைக்கப்ட்டிருந்த 40 கஞ்சா பக்கட்டுக்களை மீட்டுள்ளதுடன் விற்பனையாளர் ஒருவரையும் கஞ்சா வாங்கச்சென்ற இருவருமாக மூவரை பொலிஸார் கைது செய்தனர்
ஒலிரூட் பகுதியை சேர்ந்த சந்தேக நபர்கள் மூவரையும் 03.05.2018 நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்தனர்.