மீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு

எம்.ரீ. ஹைதர் அலி-
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மீராவோடை பிரதேசத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பின் ஐ.எல். பதுருதீனின் வேண்டுகோளின்போரில் மின்பிறப்பாக்கி (Generator) வழங்கி வைக்கப்பட்டது.
இதனை பள்ளிவாசல் நிருவாக சபையினரிடம் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பதுருதீன் ஆகியோர் 2018.04.22ஆம்திகதி - ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.

அத்துடன், சென்ற வருடம் 2017ஆம் ஆண்டுக்கான தனது மாகாண சபை நிதி ஒதுக்கீட்டிலிருந்து இப்பள்ளிவாசலுக்கு ஒலி பெருக்கி சாதனங்களை பெற்றுக்கொடுத்ததுடன், பள்ளிவாசலின் கட்டுமானப் பணிகளுக்காக தனது சொந்த நிதியிலிருந்து 25 பக்கட் சீமெந்துகளையும் பெற்றுக் கொடுத்திருந்தார்.

மேலும் மின்பிறப்பாக்கி வழங்கும் நிகழ்விலும் பள்ளிவாசல் நிருவாக சபையினர் கேட்டுக்கொண்டதற்கினங்க இரண்டாம் மாடி கட்டுமானப் பணிகளுக்காக தனது சொந்த நிதியிலிருந்து மீண்டும் 30 பக்கட் சீமெந்துகளை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்துள்ளதுடன், இரண்டாம் மாடியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் ஊடகச் செயலாளரும், கல்குடாத்தொகுதி இணைப்பாளருமான எம்.ரீ. ஹைதர் அலி, மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாசலின் நிருவாக சபை உறுப்பினர் சம்சுதீன், ரிழ்வான் பள்ளிவாசலின் மஹல்லாவாசிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -