நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் சமகால நல்லாட்சி மென்மேலும் தூய்மையானதென்பது தெளிவாகிறது


பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி தாக்கல் செய்த நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் சமகால நல்லாட்சி மென்மேலும் தூய்மையானதென்பது தெளிவாகிறது என்று சுற்றுலாத்துறை தொழில்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி தாக்கல் செய்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெறுகிறது. இதில் ஜோன் அமரதுங்க உரையாற்றினார். இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இரவு 9.30க்கு நடைபெறும்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச:
இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்டம் கண்டுள்ளதாகவும், ஐக்கிய தேசிய கட்சி தோல்வி நோக்கி பயணிக்கின்றது.

பெருந்தோட்டத் தொழில் துறை அமைச்சர் நவீ;ன் திசநாயக்க
சகலரும் பிரதமர் மீது நம்பிக்கை கொண்டு;ள்ளனர். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசியல் சதி
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி பந்துல குணவர்த்தன

நாட்டின் பொருளாதாரம் முற்றுமுழுதாக சீர்குலைந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி வி;க்ரமரத்ன

இது ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையென
:பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ:
அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளால் மக்கள் மீதான வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளது.
நாட்டில் அராஜக நிலை ஏற்படுவதை தவிர்ப்பதற்கு ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சகல தரப்புக்களும் ஐக்கியமாக பாடுபட வேண்டும்;.

உயர் கல்வி அமைச்சர் கபீர் ஹாசிம்
நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்கத்திற்கு எதிரான சதி

பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்

இரு பிரதான கட்சிகளும் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினார்.

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க:

நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்ததன் நோக்கம் நாட்டின் ஸ்திரநிலையை சீர்குலைப்பது தான். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதமும், ஆகஸ்ட் மாதமும் தேர்தல்கள் ஊடாக கிடைத்த மக்கள் ஆணையை வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உள்ளுராட்சி தேர்தலின் பெறுபேறுகள் பற்றி மீளவும் சிந்திப்பது அவசியம்.

அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா

நாட்டை கடன் பழுவில் இருந்து மீட்டெடுக்க அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது.நாட்டை சரியான திசையில் செலுத்தக்கூடிய மாலுமியாக பிரதமரை வர்ணிக்கலாம்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

தமிழ்ப் பேசும் மக்கள் 100% வாழும் பகுதிகளில் தமிழ் பேச தெரியாதவர்களை வேலைக்கமர்த்தியுள்ளனர். குளியாப்பிட்டிய பகுதியில் தேங்காய் பறித்தவர்களை வடக்கில் அலுவலக உதவியாளர்களாகவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாகவும் நியமித்துள்ளார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -