தேசிய அரசாங்கம் கலைகிறது? சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோகுமா?


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது பிரேரணைக்கு ஆதரவாக மற்றும் எதிராக உறுப்பினர்களிடையே சூடான விவாதம் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் தேசிய அரசாங்கம் முடிவுக்கு வரும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய விவாதம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் பல தரப்பட்ட கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறிய அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிக்காது இருக்க தீர்மானித்துள்ளதாக ராஜங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இறுதி தீர்மானம் ஒன்று எட்டப்படவில்லை என்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்க அத தெரணவிடம் கூறினார்.
தேசிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதமருக்கு எதிராக இருப்பது, தேசிய அரசாங்கத்தை தொடர்ந்து நடத்திச் செல்வதில் உள்ள சாத்தியம் சம்பந்தமாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
இந்நிலையில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்கள் இணைந்து ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. அதன்படி ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அடங்களாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எதிர்க்கட்சியாகும் நிலை தோன்றியுள்ளது.

இதனால் புதிய எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை நியமிக்கும் நிலை ஏற்படுவதுடன், அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறும்.

இதேவேளை திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இன்று விஷேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதுதவிர பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக கையொப்பமிட்ட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மற்றும் பிரதமரை விமர்சித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -