கழுத்திலிருந்து பாம்பு கேட்டது (கவிதை)



கழுத்திலிருந்து பாம்பு கேட்டது

+++++++++++++++++++++++++++
Mohamed Nizous



முஸ்லிம் ஹோட்டல் ஓணரிடம் ஆட்கள் கேட்டது
கொத்தில் குளிசையா?
யாரும் தயாரிக்காத குளிசையொண்ட போட முடியுமா?
ஓணர் கேட்டது-அதில்
அர்த்தம் உள்ளது.



குளிசை போட்டா குழந்தை பெறுதல்
முழுசா நிற்கும் என்று-  எந்த
கழுதை சொன்னான் காட்டு பார்ப்பம்
என்று கேட்டுப் பாரு.
சில குளிசை தூளாக்கி ஒரு கொத்தில் போட்டால்
வாழ் நாளும் பிள்ளைகளே பிறக்காதென்பது
அது  லூசு சொன்னது
அது அர்த்தம் அற்றது.



நூறு பாகை வெப்பத்திலே கொதிக்கும் கொத்துக்குள்ளே
மாறிப் போகும் மருந்தின் குணம்
கூறு கெட்ட பயலே.
இரு நூறு ரூபாய்க்குள் எடுக்கும் கொத்து காசில்
இவருக்கு இலவசமா பவ்டர் தரணுமா
ஹோட்டல் செய்வது- இவக
மேட்டர் பார்க்கவா



பெத்துப் போட கெத்து இன்றி
பிதற்றுகின்ற ஆட்கள்
கொத்துப் போடும் பொடியன் மீது
கொடிய பழியைப் போட்டார்.
பெற்று வளர்த்தல் கஷ்டம் என்று
பிள்ளை பெறாது விட்டு
மற்றவனில் குத்தம் சொல்லி
அர்த்தம் உள்ளதா
அர்த்தம் உள்ளதா
அர்த்தம் உள்ளதா?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -