முசலியுர்.கே.சி.எம்.அஸ்ஹர்-
எயிம் டு ஏ என்ற உயர்தர கணித ,விஞ்ஞான , தொழில்நுட்ப தனியார் கல்வி நிறுவனம் 2008 முதல் 24 மாணவர்களுடன் ஆரம்பி;க்கப்பட்டு இன்று 400 மாணவர்களுடன் அபார வளர்ச்சி கண்டுள்ளது.முற்றிலும் குளிரூட்டப்பட் வகுப்பறைகள் ,நவீன கற்பித்தல் உபகரணங்கள், நவீன கற்பித்தல் யுத்திகள் பயன்பாடு , பரீட்சைகள் , ஒழுக்கக்கட்டுப்பாடு ,சிறந்த ஆசிரியர் குழாம் என்பன இக்கல்வி நிறுவனத்தின் மிகப்பெரும் பலமாகத்திகழ்கின்றது.
க.பொ.த. கணிதப்பிரிவு ,விஞ்ஞானப்பிரிவு ,தொழில்நுட்பப் பிரிவு என்பன மிகலும் சிறப்பாக இயங்குகின்றன.மாணவர்கள் , பெற்றோர்கள் போன்றோருக்கான சிறந்த கல்வி வழிகாட்டல் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.இன்று பல இடங்களில் தகரக் கொட்டுகளிலும் பொறவட்டு இருக்கைகளிலும் , கற்பித்தல் நடைபெறுவதையும் ,நுளம்புக்கடி ,தௌ;ளுக்கடி , கால் சேற்றுப்புண்கள். உருவாதல் போன்றவற்றை நாம் அறியாமல் இல்லை.யுiஅ வழ யு கல்வி நிறுவனம் சிறந்த சுகாதார வசதிகளைக் கொண்ட நிறுவனமாக திகழ்கின்றது.(குடிநீர் வசதி, மலசலகூட வசதி)
2017 இல் உயர்தரப்பரீட்சைக்கு 170 மாணவர்கள் தோற்றினர் இவர்கள் 100மூ சித்தியடைவு 114 பேர் பல்கலைக்கழக அனுமதி தகைமை பெற்று;ள்ளனர். அஹமட் அக்சன் என்பவர் மரத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளார்.மாவட்ட மட்டம் 01ம் நிலை,தேசிய மட்டத்தில் 13ம் இடம்(3ஏ பேறுகள்)
2018 புதிய கல்வியாண்டிற்கான ஆரம்ப வைபவம் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.அந்நிகழ்வில் பிரதம அதீதிகளாக இக்கல்லூரியில் கல்வி கற்று பொறியியல் துறை ,மருத்துறை போன்றவற்றிற்குக்கு தெரிவாகியுள்ள சாதனையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சாதனையாளர்கள் ஒவ்வொருவராக முன்வந்து கற்றல் நுட்பங்கள் வெற்றிக்கு துணையாக நின்வர்கள்,கற்ற நூல்கள் நேரமுகாமை ,கடந்கால வினாவிடைப்பயிற்சி நடவடிக்கைகள் , மனோ தைரியம் , முயற்;;சி , தமது பார்வையில் கல்லூரி ,தொலைபேசிப் பாவனை குறைப்பு என்பன பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தனர்.இந்நிகழ்வு புதுமுக மாணவர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் பட்டறி அனுபவ பகிர்வை கொடுத்ததை காணமுடிந்தது.
தமிழ், முஸ்லிம் உறவுப்பாலமாகத் ;திகழும் இக்கல்லூரியில் விஞ்ஞான ஆய்வு கூடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.(முதல் தனியார் ஆய்வு கூடம்)மாணவர்களின் நலன் கருதி பொருளாதாரம் குறைந்த மாணவர்களை இனம் கண்டு இரகசியக் கல்வி உதவி, கல்விக் கொடை என்பன வழங்கப்பட்டு வருவதும் சிறப்பான ஒரு அம்சமாகும்.
பெண்மாணவிகளுக்கான தனியான விஷேட போக்குவரத்து வசதியும் வழங்கப்பட்டு வருகின்றது.இவை யாவற்றையும் சிறப்பாக கொண்டு நடாத்தும் பணிப்பாளர் எம்.எம்;.சாதிக் அவர்கள் சமூகத்தால் பாராட்டப்பட வேண்டியவராக செயற்பட்டு வருகின்றார்.இவரின் கல்விசார் செயற்பாடுகள் மேலும் சிறப்புற வாழ்த்துகிறோம்