மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 72 தோட்டங்களைச் சேர்ந்த 227 தொழிலாளர் குடும்பங்களுக்கு கூரைத்தகடுகள் 17.03.2018 அன்று மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, எம்.ராம், எம். உதயகுமார் மற்றும் தோட்ட அதிகாரிகள், தோட்ட தொழிலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.