காரைதீவு நிருபர் சகா-
நேற்றிரவு கல்முனையைடுத்துள்ள பெரியநீலாவணைக்கிராமத்தில் வீசிய மினச்சூறாவளியால் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் பொதுமண்டபத்தில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு கல்முனையின் பிரபல சமுகசேவையாளர் சந்திரசேகரம் ராஜனின் அனுசரணையுடன் கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியத்தினர் சமைத்த உணவை வழங்கினர்.
அங்கு சென்ற சமுகசேவையாளர் ராஜன் மக்களுக்கு தேவையான அடிப்படைவசதிகள் மற்றும் சேதவிபரங்கள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது
நேற்று இரவு பெரியநீலாவணையில் வீசிய சுழல் காற்றுகாரணமாக மூன்று தொடர்மாடிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் பலவும் வீட்டுப்பொருட்களும் கடும் சேதமடைந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்குமிடம் மின்சாரம் குடிநீர் இல்லாமலும் சமைத்துண்ண முடியாமலும் நிர்க்கதியான நிலையில் உள்ளனர்.
சுனாமியாலும் வேறு அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்ட சுமார் 500 குடும்பங்கள் இந்த குடியிருப்புக்களில் வசித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று ஏற்பட்ட அனர்த்தத்தால் இந்த குடியிருப்புக்களின் மூன்றாவது மாடி கூரைகள் பெரும் சேதமடைந்துள்ளதுடன் வீட்டின் உள்ளே இருந்த வீட்டுத் தளபாடங்களும் சேதமடைந்துள்ளதுடன் இவ்வீடுகள் கூரையில்லாது உள்ளதால் மழை காலம் என்பதாலும் இம்மக்கள் திருத்தும்வரை அங்கு வசிக்கமுடியாத நிலையே தற்போது காணப்படுகிறது. அத்துடன் இங்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதால் இக் குடியிருப்பில் உள்ள அனைத்து குடும்பங்களும் இதன் பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்.....
திடிரென ஏற்பட்ட இந்த அனர்தத்தால் நாங்கள் செய்வதறியாது நிர்க்கதியான நிலையில் உள்ளோம் மழை காலம் என்பதாலும் கூரைகள் காற்றால் வீசிப்பட்ட எங்கள் வீட்டில் தங்க முடியாது உள்ளது குடிநீர் மின்சாரம் என்பனவும் தடைப்பட்டுள்ளது உரிய அதிகாரிகள் எங்களது நிலைமையை கவனத்தில் எடுத்து அவசரமாக எங்களுக்கான உதவிகளை மேற்கொண்டு எமது வீட்டு கூரைகளை பாதுகாப்பான முறையில் தீருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இந்த தொடர்மாடி வீட்டுத்திட்டத்தில் பாதிக்கப்ட்ட மக்கள் ஏற்கனவே சுனாமியாலும் ஏனைய அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். உரிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இந்த மக்களுக்கான அவசர உதவி நடவடிக்கைகைளை துரிதமாக மேற்கொள்ளவார்களா?