மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழா





க.கிஷாந்தன்-
மா
த்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழாவின் பஞ்சரத பவனி, ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் புடைசூழ 01.03.2018 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

பன்னகாமம் என்றழைக்கப்படும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் இரதோற்சவ திருவிழாவில் 01.03.2018 அன்று காலை முதல் அம்பிகைக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

காலையில் இடம்பெற்ற அபிஷேகத்தினைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடைபெற்றது.

காலை 10.00 மணியளவில் பிள்ளையார். முருகன், சிவன் அம்பாள், அருள்மிகு முத்துமாரியம்மன், சண்டேஸ்வரர் என ஐந்து சித்திரத் தேர்களும் அலங்கரிக்கப்பட்டு ஆலயத்தைவிட்டு புறப்பட்டு மாத்தளை பிரதான வீதியூடாக பவனிவந்தது.

இந்த தேர் பவனியில் கலை, கலாச்சார மேலதாள இசை வாத்தியங்கள் இடம்பெற்றது,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -