வீட்டுத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


தலவாக்கலை பி.கேதீஸ்-

வீட்டுத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வட்டக்கொடை தெற்கு மடக்கும்புர குடியிருப்பொன்றின் வீட்டுத் தோட்டத்தில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் பெரியண்ணன் கிட்ணசாமி (வயது 67 ) முதியவரே உயிரிழந்துள்ளார்.
 இவர் வழமையாக தனது வீட்டிலிருந்து சுமார் 75 மீற்றர் தூரத்தில் காணப்படும் அவரது வீட்டுத்தோட்டத்தில் பயிர்களை மிருகங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக இரவு வேளைகளில் மின்சாரத்தை பாய்ச்சி பின்னர் விடிந்தவுடன் அதனை துண்டித்தும் வந்துள்ளார்.
 இவர் 1.3.2018 வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் மின்சார துண்டிப்பை ஏற்படுத்தாமல் வீட்டுத்தோட்டத்திற்கு சென்றபோதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இன்று காலை 7 மணியளவில் பிரதேசவாசிகளால் இவர் மின்சாரம் தாக்கி வீட்டுத் தோட்டத்தில் இறந்து கிடப்பதை கண்டு தலவாக்கலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டு மரண பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவித்த தலவாக்கலை பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -