அட்டன் டிக்கோயா நகரசபைக்காக நடைபெற்ற தலைவர் தெரிவில் வெற்றிபெற்ற சபையினையும் இழந்தது ஐ.தே.க

க.கிஷாந்தன்-
டந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் அட்டன் டிக்கோயா நகரசபைக்கு தலைவர், உபதலைவரை தெரிவுசெய்வதற்கான கூட்டம் (26.03.2018) அன்று மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் எச்.எம்.யு.பி.ஹேரத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த தலைவர் தெரிவின் போது,
பொதுஜன பெரமுன அங்கத்தவர் ஒருவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்க முன்வந்ததையடுத்து சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதன்போது இ.தொ.காவைச்சேர்ந்த அங்கத்தவர்கள் காசுக்காக குறித்த உறுப்பினர் கட்சி மாறியதாக கூறி கோசமிட்டதனை தொடர்ந்து சபை நடவடிக்கைகள் சிறிது நேரம் தாமதமாகின.

இதனைத்தொடர்ந்து சபைத்தலைவர் தெரிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு அமைதியாக்கப்பட்டதை தொடர்ந்து வெளிப்படையான வாக்கெடுப்புக்கு சபையில் தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து வாக்கெடுப்புக்கு செல்லும் போது மீண்டும் இ.தொ.கா அங்கத்தவர்கள் வாக்கெடுப்பில் ஈடுபட மறுத்ததால் மீண்டும் தாமதமாகின. அதனைத்தொடர்ந்து ஆணையாளர் அங்கத்தவர்கள் வாக்களிக்காத பட்சத்தில் வாக்கெடுப்பில் இருந்து விலகியதாக கருதி வாக்கெடுப்பை நடத்துவதாக அறிவித்ததை தொடர்ந்து வாக்கெடுப்புக்கள் இடம்பெற்றன. இதன்போது ஐக்கியத்தேசியக்கட்சி சார்பாக போட்டியிட்ட அழகமுத்து நந்தகுமார் அவர்களுக்கு எட்டு வாக்குகளும் இ.தொ.கா சார்பாக போட்டியிட்ட பாலச்சந்திரன் அவர்களுக்கு எட்டு வாக்குகளும் கையுயர்த்தி அளிக்கப்பட்டதை அடுத்து இருவரும் சமமான வாக்குகள் பெற்றதால் குழுக்கள் முறையில் தலைவரை தெரிவுசெய்ய முடிவாகின. இந்த முடிவினை தொடர்ந்து தலைவராக எம்.பாலச்சந்திரன் அவர்களும் உபதலைவராக ஏ.ஜே.எம்.பாமிஸ் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத்தேர்தலில் ஐக்கியத்தேசியக்கட்சிக்கு 7 ஆசனங்களும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு இரண்டு ஆசனங்களும் தேர்தலில் வெற்றிபெற்றனர்.

இந்த தேர்தலில் இ.தொ.கா வுக்கு 4 போனஸ் ஆசனங்களும் பொதுஜன பெரமுனவுக்கு இரண்டு போனஸ் ஆசனங்களும் இலங்கை கொமினியூஸ்ட் கட்சிக்கு இரண்டு ஆசனங்களும் கிடைக்கப்பெற்றன. இதில் கொமினியூஸ்ட் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இ.தொ.கா ஆதரவளிக்க முன்வந்தனர் எனினும் பொதுஜன பெரமுனவில் தெரிவுசெய்யப்ட்ட உறுப்பினர் ஒருவர் ஐ.தே.க வுக்கு ஆதரவளித்ததாலேயே இந்த வாக்குவாதம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாக்களிப்பின் பின் இ.தொ.கா ஆதரவாளர்கள் அட்டன் நகரசபை முன்னால் கூடி பட்டாசு கொழுத்தி ஆராவாரத்தில் ஈடுபட்டதுடன் ஊர்வலமாக நகரைச்சுற்றி வலம் வந்தனர் இதனால் நகரில் வாகன நெரிசல் நிலை ஏற்பட்டது. இந்த வாக்கெடுப்பின் போது பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -