எனவே அதற்காக உடனடியாக நீங்கள் அனைவரும் நாளை இதனை ஒன்றிணைந்து செய்யவேண்டும் வேண்டும். அப்போதுதான் நீங்கள் சமூகவாதிகள் சமூகத்துக்காக குரல் கொடுக்கும் சிறந்த அரசியல்வாதிகள் என்ற முத்திரை குத்தப்படுவீர்கள்.
என்று அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் அம்பாரை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் தெரிவித்தார்.
என்று அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் அம்பாரை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்:.
முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை ஒற்றுமைப் பட்டு செய்தால் இந்த அதிரடி நடவடிக்கையால் உலக அமைப்பின் நிதிகள் உடனடியாக நிறுத்தப்பட்டு சிறுபான்மை முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களும் மதஷ்தலங்கள் மீதான அத்துமீறல்களும் கண்டிக்கப்பட்டு சரியான விசாரணை மேற்கொள்ளப்படும். இதற்காக முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும் தயாராக வேண்டும்..
பாராளுமன்ரத்தினுள் சிரித்துக் கொண்டு சக்கப்பணிய அமர்வதில் எந்தப் பிரயோசனமும் மக்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. மாறாக உங்கள் நடவடிக்கை உங்களை வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய மக்களுக்கு பெரும் நின்மதியாக இருக்க வேண்டும். அதற்காக உங்கள் நடவடிக்கைகள் மாறவேண்டும். அப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் உறுப்புரிமையை இழக்க மாட்டீர்கள் உங்கள் செயல் நம்சமூகத்தின் விடிவுக்கான அத்திவாரமாக அமைந்து விடும் என்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் அம்பாரை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.