அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை- ஹொரவ்பொத்தானை பிரதான வீதி 10ம் கட்டை பகுதியில் வேகமாகச்சென்ற லொறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இன்று (23) மாலை 5.30மணியளவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இவ்வாறு உயிரிழந்தவர் சீனக்குடா,சின்னன்பிள்ளைச்சேனையைச்சேர்ந்த முகம்மது இஸ்மாயீல் இஷாக் (59வயது) எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது லொறியில் தந்தையும் மகனும் சென்று கொண்டிருந்த வேளை வீதியை விட்டு விலகியதில் விபத்துக்குள்ளானதாகவும் அவ்விடத்திலேயே தந்தை உயிரிழந்ததாகவும் மகனாான ஆர்.பர்வீஸ் (24வயது) காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது
விபத்து தொடர்பான விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.