இம்முறை வாக்குகளை எண்ணும் பணிகள் குறிப்பிட்ட சில வாக்குச் சாவடிகளிலேயே இடம்பெறவுள்ளதனால், அப்பணிகளும் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் இன்று பிற்பகல் 3.00 மணிவரையான காலப் பகுதியில்,
கம்பஹா மாவட்டத்தில் – 73 வீத வாக்குப் பதிவுகளும்,
களுத்துறை மாவட்டத்தில் – 70 வீத வாக்குப் பதிவுகளும்,
மாத்தறை மாவட்டத்தில் – 64 வீத வாக்குப் பதிவுகளும்,
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் – 65 வீத வாக்குப் பதிவுகளும்,
இரத்தினபுரி மாவட்டத்தில் – 75 -80 வீத வாக்குப் பதிவுகளும்,
மொனராகலை மாவட்டத்தில் – 75 வீத வாக்குப் பதிவுகளும்,
பொலன்னறுவை மாவட்டத்தில் – 68 வீத வாக்குப் பதிவுகளும்,
புத்தளம் மாவட்டத்தில் – 70 வீத வாக்குப் பதிவுகளும்,
கண்டி மாவட்டத்தில் – 65 -70 வீத வாக்குப் பதிவுகளும்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் – 75 வீத வாக்குப் பதிவுகளும்,
பதுளையில் மாவட்டத்தில் – 60 வீத வாக்குப் பதிவுகளும்,
நுவரெலிய மாவட்டத்தில் – 70 வீத வாக்குப் பதிவுகளும்,
வவுனியா மாவட்டத்தில் – 60வீத வாக்குப் பதிவுகளும்,
கிளிநொச்சி மாவட்டத்தில் – 69 வீத வாக்குப் பதிவுகளும்,
மன்னார் மாவட்டத்தில் – 70 வீத வாக்குப் பதிவுகளும்,
யாழ்ப்பாணத்தில் மாவட்டத்தில் – 47 வீத வாக்குப் பதிவுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படும்.