உள்ளுராட்சி மன்ற தேர்தல் - 2018 கல்முனை மாநகர சபை. சுயேட்சை குழு – 04, 19ம் வட்டாரம் சாய்ந்தமருது (2,4,6) கிராம சேவகர் பிரிவில் போட்டியிட்ட முஹர்ரம் பஸ்மிர் வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அவர் தனது உள்ளுராட்சிசபை என்ற தாகத்தை மையமாக வைத்து வாக்களித்த பிரதேச வாக்காளர்களுக்கும் குறிப்பாக சாய்ந்தமருது வாக்காளர் அனைவருக்கும் தனது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துள்ளார்.
நமது ஊரின் தன்மானத்தையும் ஒற்றுமையையும் முழு நாட்டிற்கும் உலகிற்கும் தெரியப்படுத்துவதற்காகவும் எமது சாய்ந்தமருது ஊரின் உள்ளுராட்சி மன்ற சபையை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் நானும் ஒரு போராளியாக நின்று எமது சாய்ந்தமருது 19ம் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதற்காக முதற்கண் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றியை தெரிவிக்கின்றேன்.
அத்தோடு இந்த போராட்டத்தில் என்னோடு உறுதுனையாக இருந்து என்னையும் வேட்பாளராக தெரிவு செய்த எமது கண்ணியத்துக்குரிய சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜூம்மா பள்ளிவாசல் நிருவாக சபையினருக்கும், எனது வட்டாரத்தில் உள்ள பள்ளிவாசல் நிருவாக சபையினருக்கும் அத்துடன் சாய்ந்தமருது-மாளிகைக்காடு வர்த்தக சம்மேளத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.
எனது இந்த வெற்றியில் பங்காளர்களாக ஆரம்பம் தொடக்கம் இறுதிவரை என்தோளோடு தோள் நின்ற எனது நண்பர்களுக்கும் குறிப்பாக எனது வட்டார மக்களாகிய சாய்ந்தமருது 2ம் 4ம் 6ம் பிரிவு பொது மக்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துகொள்கின்றேன்.
மேலும் எனது வெற்றிக்காக இரவு பகலாக உழைத்த எனது நிருவாகத்தினர்கள் கல்வியலாளர்கள் , தொண்டர்கள் , போராளிகள் , விளையாட்டு கழகங்கள் , மீனவர் சங்கங்கள் ,ஊடகங்கள், இளைஞர் கழகங்கள் மற்றும் மகளிர் அமைப்புக்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து எனது உயிரிலும் உயிரான சாய்ந்தமருதுவாழ் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்தும்கொள்கின்றேன்.
என்று தனது ஊடக அறிக்கையில் முஹர்ரம் பஸ்மிர் தெரிவித்துள்ளார்.
