முஸ்லீம்களை குழுக்களாகப் பிரித்துள்ள உள்ளூராட்சித் தேர்தல்-ஓட்டமாவடியில் சேகு இஸ்ஸதீன்

ள்ளுராட்சி சபைத் தேர்தலானது முஸ்லிம்களை குழுக்கள் குழுக்களாக பிரித்து வைத்திருக்கின்றது என முன்னாள் வடகிழக்கு மாகாண சபை எதிர்கட்சி தலைவரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளருமான சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய முன்னனியில்; போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வேட்பாளர் எச்.எம்.அமீர் தலைமையில் ஓட்டமாவடியில் நேற்று இரவு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

கிழக்கு மாகாணத்திலுள்ள அத்தனை முஸ்லிம் பிரதேசங்களிலும் நடக்கின்ற உள்ளுராட்சி தேர்தல்கள் முஸ்லிம்களை துண்டாடிக் கொண்டிருக்கின்றன. வேறு வேறு குழுக்களில் வைத்துக் கொண்டிருக்கின்றது. அது மிகவும் வேதனையான விடயம்.

உள்ளுராட்சியின் ஆட்சி அதிகாரங்களை சிறந்த முறையில் செய்ய வேண்டும் என்பதற்காக போட்டி நடைபெறுகின்றது. இதன் விளைவாக முஸ்லிம்கள் பிளவுபட்டு விடக் கூடாது. முஸ்லிம்களின் பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டுமாக இருந்தால் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

இந்த நாட்டை ஆளும் அரசியலமைப்பு சட்டம். இந்த அரசியலமைப்புச் சட்டத்திலே சில பிழைகள், தவறுகள், குறைபாடுகள் காணப்படுகின்றது. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிரச்சனைகள் காணப்படுகின்றது. ஆகவே இந்த அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும் என்று இந்த நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்தது.

இந்த நல்லாட்சி அரசாங்கம் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றது. மஹிந்த ஆட்சிக் காலத்தில்; முஸ்லிம்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -