பிரதேச சபையின் 33வது சரத்தின் திட்டம் பெருந்தோட்ட மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும்

க.கிஷாந்தன்-

லையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் நிலவுடமை உரிமையாளர் சமூதாயமாக மாற்றம் பெற வேண்டும். இந்த நாட்டில் பெரும்பான்மை இனத்தவர்கள் எவ்வாறு நிலவுடமைக்கு சொந்தகாரர்களாக காணப்படுகின்றனரோ அதேபோன்று மலையக பெருந்தோட்ட தொழைிலாளர்களும் நிலங்களுக்கு உரிமையாளர்களாக ஆக வேண்டும் என ஈரோஸ் ஜனநாயக்க முன்னணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இம் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று அட்டன் டைன் ரெஸ்ட் விடுதியில் 05.02.2018 மாலை இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், முன்னணியின் மலையக பிராந்திய பொருப்பாளரும், நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான இரா.ஜீவன் ராஜேந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

உள்ளுராட்சி சபைகளில் 33வது சரத்தை சுதந்திரமாக மலையக பெருந்தோட்ட மக்களும் அனுபவிக்க வேண்டும். அதற்காக முதல் முறையாக உள்ளுராட்சி சபைகளுக்கு போட்டியிடுகின்ற எமது முன்னணியின் உறுப்பினர்கள் பாடுப்படுவார்கள் என்றார்.

ஈரோஸ் ஜனநாயக்க முன்னணி 1975ம் ஆண்டு ஆரம்பிக்க காலப்பகுதியில் மலையக மக்களையும் வழிநடத்தும் பிரதான கொள்கையை முன்னெடுத்தே ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 40 ஆண்டுகள் காலமாக மலையக மக்களுக்கும் தமது தலைமையினை ஏற்று நடக்கின்ற எமது முன்னணி மலையக மக்களுக்கு ஒரு புதிய கட்சி அல்ல.

காத்திரமான செயற்பாடுகளை மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் முன்னெடுத்து வருகின்றது. 1985ம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தையின் போது பெருந்தோட்ட மக்களுக்கும் பிராஜா உரிமை வேண்டும் என்பதில் சர்வதேச மட்டத்தில் கோரிக்கைகளையும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி முன்வைத்தது.

1987ம் ஆண்டு மலையகத்திற்கு தனி அழகு வேண்டும் என்பதிலும் 1988ம் ஆண்டு மலையக மக்களுக்கான புதிய கிராம சேவகர் பிரதேசங்கள், உள்ளுராட்சி பிரதேச பிரிவுகள் வேண்டும் என்பதிலும் காத்திரமான கொள்கைகளை முன்வைத்திருந்தது.

1989ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் மலையக மக்கள் மத்தியில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்காத பட்சத்தில் வடக்கு, கிழக்கிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 13 உறுப்பினர்களில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு உறுப்பினர் தேவை என்பதை உணர்ந்து இராகலை லிடேஸ்டேல் பகுதியிலிருந்து பாடசாலை அதிபரான மலையப்பன் இராமலிங்கம் என்பவரை நியமித்தோம்.

அதற்கு பிறகு எமது ஈரோஸ் ஜனநாயக்க முன்னணிக்கு மலையகத்தில் ஒரு சின்னம் இல்லை என்பதால் முதல் முறையாக இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நாம் கம்னியூஸ்ட் கட்சியின் ஊடாக நட்சத்திர சின்னத்தில் அம்பகமுவ, நோர்வூட், மஸ்கெலியா ஆகிய பிரதேச சபைகளுக்கு 90 வீத வேட்பாளர்களை களமிறக்கிவுள்ளோம்.

பிரதேச சபைகளின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர் மக்கள் பெற்றுக்கொள்ள கூடிய அனைத்து உரிமைகளையும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற பிரதான கொள்கையை முன்வைத்தும் இந்த நாட்டில் பெருந்தோட்ட மக்கள் ஓரங்கட்டப்படாமல் சட்டப்படி நில உரிமையாளர்களாக மாற்றம் பெற வேண்டும் என்ற கொள்கையை முன்வைத்தும், இத்தேர்தலில் காலடி எடுத்துவைத்துள்ளோம்.

இது தொடர்பாக அரசாங்கம் உள்ளிட்ட மலையகத்தின் தலைமைத்துவ அமைச்சர்கள் அணைவருக்கும் வழிநடத்த கூடிய வழிவகைகளை நாம் எடுத்துரைத்துள்ளோம். இன்று இந்த தேர்தலில் அரசாங்கம் மாற்றம் ஒன்று வரபோவதில்லை. சமூதாயத்திற்கு சேவை செய்யக்கூடிய பிரதிநிதிகளை வட்டார ரீதியில் தேர்ந்தெடுப்பதற்கு உள்ள தேர்தலாக அமைகின்றது.

ஆனாலும், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை பொருத்தவரையில் பிழையான ஒரு பார்வை பார்க்கப்படுகின்றது. அதில் பணம், பலம், குண்டர்கள் நடவடிக்கை, உணவு, மதுபானம் போன்றவற்றை வாக்களர்களுக்கு வழங்கினால் வாக்குகள் கிடைத்துவிடும் என்ற முட்டால் தனமான பிழையான கருத்து மக்களை கரைப்பிடிக்க இப்பகுதியில் தூண்டப்பட்டு வருகின்றது.

இவை அனைத்தையும் தகர்த்தெரிந்து சுயமாக வாக்களிக்க மக்கள் முன்வர வேண்டும் இதன்போது அந்த பிழையான கரை மாற்றம் பெறும். இந்தவகையில் நாம் மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கண்டறிந்து பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்தலில் வெற்றியீட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

தோட்ட பகுதிகளில் 20 சதவீதமானவர்களுக்கு புதிய வீடுகள் அமைக்கப்பட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, ஒதுக்கப்படும் 80 சதவீதமானவர்களுக்கு வேலையற்ற ரீதியிலும், தோட்ட உத்தியோகத்தர்கள் என்ற ரீதியிலும் வீடுகள் வழங்கப்படுவதில்லை. இதனை மாற்றியமைத்து சமமாக இவர்களுக்கும் வீடுகள் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் முழுமையான கிராமமயம் என்ற கொள்கைக்கு ஏற்றுடையதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -