மாலைதீவில் போராட்டம் உக்கிரம்- அவசரகாலநிலை பிரகடனம் முன்னாள் ஜனாதிபதி கைது

லைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அப்துல் கையூம் மற்றும் அந்நாட்டின் பிரதம நீதியரசர் அப்துல்லா சயீட் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அவசரகாலநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

தனது பதவி எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என்ற நிலை உள்ளதால், அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் எதிர்வரும் 15 நாட்களுக்கு அவசரகாலநிலையை பிரகடனம் செய்துள்ளார்.

மாலைதீவின் முன்னாளல் ஜனாதிபதி மஹ்மூத் அப்துல் கையூமின் வீட்டை நேற்றிரவு சுற்றிவளைத்த மாலைதீவு பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளதுடன் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அந்நாட்டின் பிரதம நீதியரசர் அப்துல்லா சயீட்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.



மாலைதீவெங்கும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



மாலைதீவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித்தலைவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் 12 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை பதவிநீக்கியது தவறானதெனவும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்பிரகாரம் 12 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பதவியை மீண்டும் வழங்கினால் தற்போதைய ஜனாதிபதியின் பதவி பறிபோகும் சூழல் உள்ளது.

இதனால், அவர் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்து விட்டதுடன் பாராளுமன்றம் கூடுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. அத்துடன் அரச அலுவலகங்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.



அரசாங்கம் நீதிபதிகளின் உத்தரவை ஏற்கக் கூடாது என அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியதையடுத்து ஐ.நா சபையும், சர்வதேச நாடுகளும் தலையிட வேண்டும் எனக் கோரியும் ஜனாதிபதி யாமீன் பதவி விலக வேண்டும் எனக் கோரியும் எதிர்க்கட்சியினர் நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -