இலங்கை நாட்டில் மொட்டு மலர்ந்து, மணம் வீசுவதைபொறுத்துக்கொள்ள முடியாமல், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனைக்குஆதரவளித்த முஸ்லிம்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை,நல்லாட்சி அரசு கட்டுப்படுத்த வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அவ் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..
இலங்கை நாட்டில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மாபெரும்வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியானது இலங்கை நாட்டில்அனைவரும் எதிர்பார்த்த ஒன்றே. யாருமே எதிர்பார்க்காத விடயம்,இந்த வெற்றியில் சிறுபான்மை மக்கள் இந்தளவு பங்களிப்புசெய்வார்கள் என்பதே! அதிலும் குறிப்பாக இலங்கை முஸ்லிம் மக்கள்.
இந்த வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாது, பல இடங்களில்நல்லாட்சி அரசின் ஆதரவாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக முஸ்லிம் மக்கள் மீதாகும். உலப்பனை,பயனவங்குவையில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான, ஒரு வர்த்தகநிலையம் தீக்கிரையாக்கப்பட்டதோடு, கடையும்சூரையாடப்பட்டுள்ளது. இவ் வர்த்தகர், தனது வர்த்தக நிலையத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனைக்கு வழங்கியிருந்தார்.
முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை எரிப்பது, அவர்களுக்கு கைவந்த கலை. அதனை அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.இப்படியான வேலையை இன்னுமின்னும் செய்து, தங்களுக்குஎஞ்சியிருக்கும் கொஞ்ச மானத்தையும் போக்கிக்கொள்ள வேண்டாம்.உடனடியாக நல்லாட்சி அரசு, இவ்வாறான வன்முறைகளை நிறுத்தும்வகையில், தனது ஆதரவாளர்களுக்கு வழி காட்ட வேண்டும். எங்கள்கட்சி காரர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றபோதும், முஸ்லிம் முக்கியஸ்தர்கள் சிலர் நாங்கள் தான், ஏதோவன்முறைகளை செய்கிறோம் என காட்ட வருகின்றனர்.
இத் தேர்தல் முடிவானது முஸ்லிம்கள் எங்களோடு கை கோர்க்கஆரம்பித்துள்ளதை எடுத்துக் கூறுகிறது. அதற்கு முஸ்லிகளின் வர்த்தகநிலையங்களை தாக்கி, எங்கள் தலை மீது பழியை போட்டு, எங்களைமுஸ்லிம்களுக்கு எதிராக திருப்ப முயற்சிக்கின்றனர். அதுஅவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கொந்தராத்து வேலை. அவ்வாறுகொந்துராத்து வழங்கப்பட்டவர்களில் ஒருவரான அசாத் சாலி, இத்தேர்தலில் தனது வட்டாரத்தில் கூட வெற்றிபெற முடியாதளவுதோல்வியை தழுவியுள்ளார். இதுவே இறைவனின் நாட்டத்தால் மக்கள்வழங்கிய தீர்ப்பாகும். இனியும் மக்கள் பொய் வதந்திகளை நம்பி ஏமாறதயாரல்ல.