அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மனையாவௌி கடற்கரையில் குளிக்கச்சென்ற ஆறு இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி இன்று (24) மாலை 5.30மணியளவில் காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் காணாமல் போனவரை கிராமத்தவர்கள் தேடி வருவதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை மனையாவௌி சாரணர் வீதியைச்சேர்ந்த இராசலிங்கம் சிந்துஜன் (16 வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த இளைஞர்கள் ஆறு பேரும் கடல் குளிப்பதற்காக சென்ற போது இருவர் நீரில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.