க.கிஷாந்தன்-
நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகாமையில் 23.02.2018 அன்று மாலை 4.30 மணியளவில் தடம்புரண்ட புகையிரதம் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை. இதனால் மலையகத்திற்கான புகையிரத சேவை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டது. எனினும் இதுவரை வழமைக்கு திரும்பவில்லை. பயணிகளை வேறொரு ரயிலுக்கு மாற்றி அனுப்பி வைக்கப்படுவதாக நானுஓயா புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
எது எவ்வாறான போதிலும் புகையிரத சேவையை பகல் நேர அளவில் முழுமையாக வழமைக்கு கொண்டு வர முடியும் என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.