ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
முக நூல்களில் மிகவும் அருவருக்க தகவகையில் பதிவேற்றங்களை ஏற்படுத்தி வரும் நாந்தான் சுலைமான் எனும் கள்ள ஐடிக்கும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், கல்குடா பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினுடைய தீவிர பேச்சாளரும், எனது பாடசாலை மற்றும் எனது ஓட்டமாவடி மூன்றாம் வட்டார வீட்டுக்கு அருகாமையில் ஒரு குடும்ப நண்பனை போல் நீண்ட காலம் பழகிய முஹாஜிரின் மாஸ்ட்டருக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது என்பதனை நான் எலோருக்கும் தெரிவித்துகொள்வதோடு அது எனக்கு ஒரு கடமைப்பாடாகவும் இருக்கின்றது.
நான் இதை ஏன் கூறுகின்றேன் என்றால்.? என்னையும் பரவாலாக குறித்த முக நூல் கள்ள ஐடியானது விமசித்து வருகின்றது. அல்லாஹ் போதுமானவன். என்னிடம் பலர் முஹாஜிரின் மாஸ்டர்தான் இதனை செய்கின்றார் என கூறியும் உள்ளனர். அதனை நான் கடந்த ஓட்டமாவடி நம்பிக்கையாளர் தெரிவின் பொழுது முஹாஜிரின் மாஸ்ட்டரிடம் பள்ளிவாயலில் வைத்து நேரடியாக கேட்ட பொழுது அவர் இரண்டு ரக்காத்துக்கள் தொழுவிட்டு வ அல்லாஹ் மீது ஆனையாக அது நான் இல்லை என என்னிடம் சத்தியம் செய்தார். அவரை சந்தேகித்து அவரிடம் நான் வினவியதற்கு என்னை அல்லாஹ் பொறுந்திக்கொள்வானாக.
அந்த வகையில் முஹாஜிரின் மாஸ்ட்டர் ஒருவரை விமர்சிப்பதென்றால் கள்ள ஐடியில் இருந்து விமர்சிப்பதற்கு அவருக்கு எந்த தேவைப்பாடும் கிடையாது. எமது சமூகத்துக்கே தெரியும் அரசியல் ரீதியான பிழைகளாக இருந்தாலும் சரி ஏனைய பிழைகளாக இருந்தாலும் சரி அவர் நேரடியாக மேடை ஏறி துணிச்சலுடன் விமர்சிக்க கூடியவர். அவர் நீண்ட காலம் எமது சமூகத்திற்காக வாழ வேண்டும்.
அதனடிப்படையில் 16.02.2018 மீண்டும் சகோதரர் சுலைமான் என்னையும் எனது மனைவியையும் தாறுமாறாக விமர்சித்திருந்தார். அதற்கும் சிலர்.. அது முஹாஜிரின் மாஸ்ட்டர் என குறிப்பிட்டு விமர்சனத்திற்கு கீழே தங்களது பதிவுகளை ஏற்றம் செய்திருந்தனர். அபொழுதுதான் எனக்கு முஹாஜிரின் மாஸ்ட்டர் பள்ளிவாயலில் வைத்து மறுப்பு கூறி சத்தியம் செய்த ஞாபகம் வந்தது. ஆகவே வீனாக ஆசிரியர் முஹாஜிரினுக்கும் நான் தான் சுலைமான் எனும் கள்ள ஐடிக்கும் சம்பந்தம் இருக்கின்றது என சகோதரர் முஹாஜிரின் மாஸ்ட்டர் மீது வீன் பழி சுமத்த வேண்டாம் என்பதனை முக நூல் நண்பர்கள் அடங்களாக எல்லோரையும் அன்பாய் கேட்டுக்கொள்கின்றேன்.
இப்படிக்கு ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்