சுதந்திரக் கட்சி, தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகும்???



டைமுறையிலுள்ள தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றின் மூலம் அமைச்சர் மகிந்த அமரவீர இந்த விடயம் குறித்து அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இன்று குறித்த தீரை்மானம் தொடர்பான இறுதி முடிவு சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகும் தீர்மானம் உறுதிப்படுத்தப்பட்டால், புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதியினால் இன்றைய தினமே உயர் நீதிமன்றத்தின் சட்ட ஆலோசனை கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்றைய தினம் ஜனாதிபதிக்கும் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேசிய அரசாங்கம் தொடர்பான நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை உருவாக்க முடியாதபட்சத்தில், தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுவது சிறந்ததாக அமையும் என அவர்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, நேற்றைய தினம் ஜனாதிபதி பிரதமர் மற்றும் சபாநாயகருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில், தாம் பிரதமர் பொறுப்பில் இருந்து விலகப் போவதில்லையென்ற நிலைப்பாட்டை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -