விகிதாசார பட்டியலூடாக கல்முனை மாநகர் செல்லும் கலீலுர் ரஹ்மான்



ம்முறை இடம்பெற்ற உள்ளுராட்சிசபைத் தேர்தலில் கல்முனை மாநகரசபைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்சார்பில் போட்டியிட்ட கலீலுர் ரஹ்மான் அந்தக்கட்சிக்கு கிடைத்த பட்டியல் தெரிவின் ஊடாக சபை உறுப்பினராக தெரிவு செய்யப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த பொதுத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கலீலுர் ரஹ்மான் கட்சியின் தீவிர செயற்பாட்டாளரும் கல்வியலாளருமாகும். இளம் துடிப்புள்ள கல்வியலாளர்கள் கல்முனை மாநகரசபை போன்ற இடங்களில் உறுப்பினர்களாக இருப்பது அந்த அந்த பிரதேசங்களின் அபிவிருத்திக்கும் விசேடமாக கட்சிகள் மாறாத இவர்களால் கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்வதற்கும் வாய்ப்பாக இருக்கும் என்றும் பிரதேச வாசிகளால் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

உறுப்பினராக கட்சியின் தலைமையால் தெரிவு செயப்பட்டமைக்காக தலைமைக்கு பிரதேச மக்கள் நன்றி கூறி வருகின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -