கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவிப்பு



டந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமது கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

மக்களின் கருத்தையும் ஆணையையும் தமது கட்சி முழுமையாக ஏற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த முடிவுகள் தமது கட்சிக்கு ஒரு எச்சரிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியில் உள்ள குறைபாடுகளை ஆராய்ந்து திருத்தமான துரிதமான பயணமொன்றை தமது கட்சி முன்னெடுக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட பல சேவைகள் பலருக்கு இதுவரை தென்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த சேவைகளின் நன்மைகள் விரைவில் பொதுமக்களை போய்ச் சேரும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

வெற்றி கொள்ளப்படாத மற்றும் தாமதமான கருமங்களையும் மாற்றியமைத்து வெற்றியை நோக்கி செல்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -