நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
பொகவந்தலா நகரில் வர்த்கர்கள் 25 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்
பொகவந்தலா நகரில் 28.02.2018 பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு சோதணையின்போது நகரின் வர்த்கர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
கினிகத்தேனை லிந்துல்ல மஸ்கெலியா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுகாதார பரிசோதகர்கள் 25 பேர் மேற்படி சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்
நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் பேக்கரிகள் ஹோட்டல்கள் என்பன சோணையியிடப்பட்டுள்ளது
சோதணையின் போது விலை பட்டியல் இன்மை.காலவதியான பொருட்கள். பொருட்கள் சேமிப்பு அறை உரியமுறையில் இன்மை போன்ற குற்சாட்டுகளின் பேரிலே 25 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ததாக பொகவந்தலா பொது சுகாதார பரிசோதகர் கே.ஜெயகனோசன் தெரிவித்தார் வழக்கு பதிவு செய்த வர்த்தகர்கள் எதிர்வரும் 09.03.1018 வெள்ளிக்கிழமை அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தர் மேலுல் விற்பனக்கு உகந்ததல்லாத உணவு பொருட்கள் சுகாதார பரிசோதகர்களினால் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தர்