கொழும்பு 12 ல் உள்ள பாத்திமா பாலிஹா மகளிா் கல்லுாாியின் நுாற்றாண்டு விழா


அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு 12 ல் உள்ள பாத்திமா பாலிஹா மகளிா் கல்லுாாியின் நுாற்றாண்டு விழா எதிா்வரும் மாா்ச் மாதம் 28ஆம் திகதி கொழும்பு தாமறை தடாகாத்தில் கல்லுாாி அதிபா் சியானா அஸ்லம் தலைமையில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளாா் , மற்றும் கல்வியமைச்சா், மேல்மாகாண முதலமைச்சா் மற்றும் முஸ்லீம் அமைச்சா்களும் கொழும்பு முஸ்லீம் அரசியல்வாதிகளும் கலந்து சிறப்பிக்க உள்ளதாக கல்லுாாி அதிபா் திருமதி சியானா தெரிவித்தாா்.

இதனை முன்னிட்டு கல்லுாாியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று(28ஆம் திகதி) கொழும்பில் உள்ள 14 பிரபல பாடசாலைகளை அழைத்து பொது அறிவு , நுன்னறிவு மற்றும் உங்களுக்கு தெரியுமா? எனும் மும் மொழிகளிலும் போட்டி நிகழ்வொன்றினையும் கல்லுாாி ஏற்பாடு செய்திருந்தது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ” டேட்டா மைன் கம்பனியின்” தலைவா் பைசால் இஷ்ஸடின் கலந்து வெற்றி பெற்ற கல்லுாாிகளுக்கு பணப்பரிசில்களை வழங்கிவைத்தாா். முதலாமிடத்தினை கொழும்பு ஆனாந்தாக் கல்லுாாியும், இரண்டாம் இடத்தினை கொழும்பு ரோயல் கல்லுாாியும், மூன்றாம் இடத்தினை கொழும்பு விசாக்கா வித்தியாலயமும் பணப்பரிசில்கள் பிரதம அதிதியினாலும் கல்லுாாி அதிபர் திருமதி சியானா அஸ்லத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -