ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா. காரியாலயத்துக்கு சென்ற புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அங்கு வைக்கப்பட்டிருந்த விசேட புத்தகத்தில் தனது இரங்கல் செய்தியை பதிவு செய்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,
இலங்கையில் சுமார் 6 வருடங்களாக ஐ.நாவின் வதிவிட பிரதிநிதியாக கடமையாற்றிய உனா மக்கோலியின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது மறைவால் கவலையுற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், சக ஐ.நா சபை அங்கத்தவர்கள் மற்றும் ராஜதந்திரிகளுக்கும் எனது அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்கிறேன். – என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -