அதிமேதகு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன நாளை(31-01-2018)அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்கின்றார்.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கல்முனை தொகுதி இணைஅமைப்பாளரும் கல்முனை மாநகர சபையில் போட்டியிடும் 2ஆம் வட்டார வேட்பாளர் இஸட்.ஏ.எச்.றஹ்மானின் வேண்டுகோளின் பேரில் அவர் மாலை 4.00 மணிக்கு பெரியநீலாவணை வீசி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து விஷேட உரையாற்றவுள்ளதாக இணைஅமைப்பாளர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் தெரிவித்தார்.
இந்த வருகையின் போது அவர் அம்பாறை,அக்கரைப்பற்று,சம்மாந்துறை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
