கூட்டமைப்பின் கூட்டத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு மக்கள் மீது சோதனைக் கெடுபிடி


பாறுக் ஷிஹான்-
புதுக்குடியிருப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் பங்கேற்கும் பரப்புரை கூட்டத்திற்கு சென்ற மக்கள் தீவிர சோதனைக் கெடுபிடிக்கு உட்படுத்தப்பட்டிக்கின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு ஐயன்கோவிலுக்கு அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெறுகின்றது.
இந்த நிகழ்விற்காக அழைக்கப்பட்ட மக்கள் பொலிஸாரின் தீவிர சோதனைக் கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். குழந்தைகளுடன் செல்லும் தாய்மார் முதியவர்கள் உட்பட அனைவரும் தீவிர உடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இது குறித்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -