பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்த இரண்டு ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பான விவாதத்தை பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதத்திற்கான திகதியை தீர்மானிப்பது தொடர்பில் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்படாமையால் சபாநாயகர் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளார்.
இருவருக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே பிரதமரின் ஆலோசனைக்கமைய எதிர்வரும் 6ஆம் திகதி 10.30 மணிக்கு ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பில் விவாதிக்கப்படும் என்ற தீர்மானம் எட்டப்பட்டுள்ளது
