தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வினாயகமூர்த்தி முரளிதரன் கூறுகிறார்.
காரைதீவு நிருபர் சகா-
என்னை துரோகி என்பதில் அர்த்தமில்லை துரோகிகள் தமிழ்த்தேசியக்
கூட்டமைப்புக்குள்தான் உள்ளனர். பணத்தை வாங்கிவிட்டு முதலமைச்சர் பதவியை விற்றுள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்
களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு தொடரந்து உரையாற்றுகையில்
என்னால் சண்டை நிறுத்தப்பட்டதாலையே இன்று இளைஞர்கள் மிகவும் சுதந்திரமாக நடமாடி திரிகின்றனர். நான் சண்டை பிடிக்கமுடியாதென்று போராட்டத்தில் இருந்து விலகவில்லை. இளைஞர்களின் நன்மை கருதியே நான் விலகியிருந்தேன். இதனையே கருணாம்மான துரோகி என்று கூறுகின்றனர். துரோகிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள்தான் உள்ளனர்.
நாங்கள் விடுதலை போராளிகளாக போராடினோம் சிறிதுகாலத்தின் பின்னர் வெளிநாடுகள் எங்களை பயரங்கரவாத இயக்கமாக்கிளது. இதே நேரத்தில் எங்களுக்கு தெரியாமல் தலைவரும் பொட்டம்மானும் முடிவெடுத்து தமிழ் நாட்டில் ராயு காந்தியை கொலை செய்தனர்.
இதனை விடுதலை புலிகளே மேற்கொண்டனர் என்பது உறுதியாகிவிட்டது. இதனால் இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளை தடைபண்ணினர். அதனைத் தொடர்ந்து 26 நாடுகள் பயங்கரவாத இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை பண்ணியிருந்தனர். அமேரிக்க இரட்டை கோபுரதாக்குதலின் பின்னர் உலகில் எந்தவொரு யங்கரவாத இயக்கமும் இருக்க கூடாதென அமேரிக்கா உட்பட உலகநாடுகள்
முடிவெடுத்தது.
இந்த காலகட்டத்தில் தான் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலை
புலிகள் இயக்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்தது.
இதில் ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டமையாலையே என்னுடன் தலைவர் முரண்பட்டுக் கொண்டார். இதன் பின்னர் நான் ஒதுங்கிக் கொண்டேன்.
யுத்தத்தில் தோல்வியுற்றதற்கு நான் காரணமா? அது அவர்களின் இயலாமையாகும். நான் ஒரு முறைதான் அந்த போர்க் களமுனைக்கு சென்றுள்ளேன்.
பிரபாகரனை அடையாளப்படுத்துவதற்கு மாத்திரம்இ இதுதான் உண்மை.
இயலாமைகாரணமாக போரில் தோற்றுவிட்டு என்னை துரோகி என்பதில் என்ன நியாயம் உள்ளது.
மட்டக்களப்பில் இன்று பார்த்தால் தமிழரின் நிலை பின்னோக்கி சென்று
கொண்டிருக்கின்றது. இதனை தட்டி கேட்பதற்கு எவரும் இல்லை பணத்தை
வாங்கிவிட்டு முதலமைச்சர் பதவியை விற்றுள்ளனர் எனவே எதிர்வரும் பிரதேச சபை தேர்தலில் எமது கட்சி பிரதேச சபைகளை கைப்பற்றவேண்டும் எமக்கு 30 வருட போராட்ட அனுபவம் உள்ளது.
அதனுடன் அரசியல் அனுபவம் உள்ளது. மற்றும் எமது கட்சிக்கு சர்வதேசத்தின் செல்வாக்கும் சிங்கள் மக்கள் மத்தியில் பாரியு அதரவும் எமக்கு உள்ளது இதனை வைத்துக் கொண்டு நாங்கள் தமிழரின் நலனுக்காக பாடுபடுவோம். யாருக்கும் நாங்கள் பயப்படதேவையில்லை. தமிழர் ஒரு வரை முதலமைச்சர் ஆக்குவதே எமது அத்திவாரமாகும்
உலகத்திலே ஒரு எதிர்கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களித்த வரலாறு
உண்டா? அது இங்குதான் நடந்துள்ளது. அனைத்திற்கும் கை உயர்த்திக் கொண்டு இருக்கின்றனர்.
இப்படி அரசாங்கத்திற்குபு முட்டுக்கொடுப்பதை விட அமைச்சு பதவி
எடுத்துக்கொண்டு மக்களுக்கு அபிவிருத்தியை செய்யுங்கள் இதற்கு முடியாது. இதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருந்து வருகின்றது. அன்று பழுகாமத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டம் ஆராம்பிப்பதற்கு முன்னர் ஒருவர் அவர்களிடம் கேட்டுள்ளார் அடுத்த முஸ்லிம் முதலமைச்சரின் பெயரைக் கூறிவிட்டு கூட்டத்தினை ஆராம்பியுங்கள் என்று கூறியுள்ளார்.
அதற்கு பதிலளிக்க முடியாமல் அவரை விரட்டியுள்ளனர். எனவே மக்களும் தற்போது விழிப்படைந்துள்ளனர். இம்முறை தேர்தலில் பாரிய மாற்றத்தினை
எதிர்பார்ப்பதாக அவர் இதன்போது தெரிவித்தார்
