கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை.
எம்.ஜே.எம்.சஜீத்-
நடைபெறவுள்ள பிரதேச சபைத் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் தங்களுக்காக மக்களிடம் ஆணையினை கோரும் போது வாக்களிக்கும் மக்களால் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படு;ம நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் அப்போதுதான் இன்னும் ஒரு தேர்தலின் போது மக்கள் மத்தியில் வாக்கு கேட்டுச் செல்லும் போது மக்கள் நம்பிக்கை வைத்து ஆதரவு வழங்கும் நிலமை உருவாகும் என பொத்துவில் பிரதேச சபையில் சிறி லங்கா சுதந்திர கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரும்ää பொத்துவில் ஜும்மா பள்ளி வாசல் தலைவருமான அல்- ஹாஜ் எம்.எஸ். சுபையிர் தலைமையில் களப்புக்கட்டு பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்….
நமது நாட்டில் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் நியமன பத்திரங்களை கையளித்து விட்டு மக்கள் மத்தியில் சென்று வாக்கு கேட்கும் போது மக்கள் தங்களுக்கான தேவைகளையும்ää தங்கள் மனங்களில் நீண்ட காலமாக புதைந்துள்ள விடயங்களையும் வேட்பாளர்களிடம் தெரிவிப்பார்கள். தேர்தலில் வெற்றி அடைந்தவுடன் அதே மக்கள் தங்களின் மக்கள் பிரதிநிதிகளின் காரியாலம் சென்று தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய முறையில் தான் நமது நாட்டின் அரசியல் முறை அமைந்துள்ளது.
எனவேää எப்போதும் அரசியல் அதிகாரம் உள்ளவர்கள் நல்லவைகளை சிந்தித்து மக்கள் நீண்ட காலம் பயன் பெறும் திட்டங்களுக்கு முக்கியதுவம் கொடுத்து செயற்பட வேண்டும். தேர்தலில் வெற்றி பெறும் பிரதிநிதிகள் தங்களை வெற்றி பெறுவதற்கு உதவிய மக்களுக்கு உதவி புரிவது கடமையாகும். ஆனால் தங்களின் பிரதேசத்தில் தங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்கும் நீங்கள்தான் மக்கள் பிரதிநிதி என்பதனை மறந்து விடாமல் நமது எல்லோருக்குமான பிரதிநிதியாக செயல்படும் போதுதான் இறைவனின் கருனை நமக்கு எப்போதும் கிடைத்த வண்ணம் இருக்கும் எங்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்த காலமெல்லாம் எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கான பணிகளை செய்வதுடன் நமது பிரதேசத்தில் உள்ள ஏழை மக்களுக்கும் தமிழ்ää சிங்களää மக்களுக்கும் கட்சி பேதமின்றி பணிகளை செய்ய எங்களுக்கு இறைவன் சந்தர்பங்களை வழங்கினான்.
எங்களிடம் அரசியல் அதிகாரம் இல்லாத சில காலம்தான் நாங்கள் கிழக்கில் வாழும் மூவின மக்களுக்கும் இனபேதமின்றி கட்சி பேதமின்றி புரிந்த அபிவிருத்தி பணிகள்ää தொழில் வாய்ப்புகளின் நன்மைகள் குறித்து மக்களும்ää மாற்றுகட்சியினரும் பகிரங்க மேடையில் பேசவும் நிலமை ஏற்பட்டது. இதற்காக நாங்கள் இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றோம்.
அரசியல் அதிகாரத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்படுபவர் மக்களின் நலனில் நம்பிக்கையுடன் செயல் படாவிட்டால் அவருக்கு கேள்வி கணக்கு உள்ளது போல்தான் நமது மக்களுக்கான பிரதிநிதிகளை அடையாளம் கண்டு இறைபக்திää மக்களுக்கு உதவும் மனப்பாங்கு எல்லா இனங்களுடனும் இன ஒற்றுமையினை கட்சி எழுப்பும் வேட்பாளர்களை அடையாளம் கண்டு மக்கள் தங்களுக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள பெறுமதிமிக்க வாக்குரிமையை பயன்படுத்த வேண்டிய பாரிய பொறுப்புள்ளது என தெரிவித்தார்.