மின்சாரம் தாக்கி மரணம்



அப்துல்சசலாம் யாசீம்-

திருகோணமலை அத்தாபெந்திவெவ பெனிக்கிட்டியாவ வயல் பகுதியில் விவசாயியொருவரின் சடலமொன்று இன்று (28) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் ரொட்டவெவ.அத்தாபெந்திவெவ பகுதியைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அவ்சதஹாமிகே சுகத் பிரதீப் குமார (45வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- சனிக்கிழமை இரவு பெனிக்கிட்டியாவ வயலுக்கு காவலுக்காக சென்ற போது வயலை பாதுகாப்பதற்காக யானை மின் வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வேளியில் சிக்குண்ட நிலையில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட நிலையில்
உயிரிழந்திருக்கலாம் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

சடலம் சம்பவ இடத்தில் காணப்படுவதுடன் சடலத்தை நீதவான் பார்வையிட்ட பின்னர் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -